
- ஃபில்ட்டர் காப்பி செய்முறை
தேவையான பொருட்கள் :
* காபித்தூள் 8 டீஸ்பூன்
* பால் கால் லிட்டர்
* சர்க்கரை தேவைக் கேற்ப
செய்முறை :
ஃபில்ட்டரில் காபித்தூளை போட வேண்டும். (சிறிய ஃபில்ட்டர் என்றால் 4 டீஸ்பூன் காபித்தூள் போதும்).
தண்ணீரை நன்கு கொதிக்கவிட்டு ஃபில்ட்டர் நிரம்பும் வரை தூக்கி ஊற்றவும். (டிகாசன் வடியும் வரை விட வேண்டும்).
பில்டர் காபியை தயார் செய்வதில் நம்மில் சிலர் சிரமப்படுகிறோம். இதற்கு காரணம் டிகாஷன் மற்றும் பால் மிக்ஸ் செய்யும் விகிதம் தான். இன்றைய பதிவில் சுவையான பில்டர் காபியை எப்படி போடுவது என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.பாலை நன்கு வாசனை வரும் வரை காய்ச்ச வேண்டும்.
ஒரு டம்ளர் காபிக்கு கால் பங்கு டிகாசன், முக்கால் பங்கு பால், ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலக்கவும். (காபிக்கு பால் நன்கு காய்ச்சுவது தான் முக்கியம்).
கம கமக்கும் ஃபில்ட்டர் காபி தயாராகி விட்டது.