அகத்திக் கீரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு வராது..!!

அகத்திக் கீரையை வேக வைத்த தண்ணீரில் தேன் கலந்து குடித்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா.

பொதுவாக கீரைகள் உடல் நலத்திற்கு நன்மை செய்ய கூடியது .தினம் ஏதாவது ஒரு கீரை நம் மதிய உணவில் இடம் பெற்றால் நம் வீட்டுக்கு டாக்டர் செலவே இருக்காது.அந்த அளவுக்கு கீரைகளில் இரும்பு சத்து அடங்கியு உள்ளது. அதுவும் குறிப்பாக அகத்தி கீரையை நாம் உணவில் சேர்த்து வந்தால் நம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் .

மேலும் இந்த கீரை மல சிக்கலை போக்கி நம் உணவை சீரணிக்க வைத்து நம் பித்தத்தை தணிக்கிறது .இந்த கீரையின் பூவை கூட சமைத்து சாப்பிடலாம்.மேலும் பற்கள் இருதயம் மூளை நலம் பெற இது உதவுகிறது .மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி நம் ஆரோக்கியம் காக்கிறது மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்.

  • அகத்திக் கீரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு வரவே வராது
  • அகத்திக் கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் குடல் புண்ணிலிருந்து நிவாரணம் கிடைக்கும் .
  • அகத்திக் கீரையை வேக வைத்த தண்ணீரில் தேன் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் ஓடி போய் விடும்
  • அகத்திக்கீரை மணத்தக்காளி கீரை இரண்டையும் அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் இருந்த இடம் தெரியாது.
  • அகத்திக் கீரையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சுடு நீரில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சுவலி ஓடி விடும்
  • அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டு வந்தால் தலை கிறுகிறுப்பு வாந்தி போன்றவை நோய்களிடம் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Read Previous

பள்ளி மாணவியை ஆபாசமாக செல்போனில் படம் எடுத்து வைத்திருந்த ஊழியர்..!! போக்சோ சட்டத்தில் கைது..!!

Read Next

நியூசிலாந்து நாட்டின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular