
ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடிப்பில் இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘அகிலன்’ திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், தற்போது இந்த படம் ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றூள்ளது. இதனையடுத்து, திரையரங்கில் வெளியாகிய ஒரு மாதம் கழித்தே ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர்கள் நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.