வயதால் எவ்வளவு தான்
அதிகமானாலும் ஒரு அக்காவுக்கு
தன் தம்பி எப்போதும்
சிறு பிள்ளை தான்!
“அக்கா” பாசத்தின் தாய்
அரவணைப்பின் அன்னை..
மகிழ்ச்சியின் அம்மா..!
தம்பியின் கோபத்திற்கு
அடங்கவும் அதே தம்பியை
தன் அன்பால் அடக்கவும்
தெரிந்த ஒரு பெண் அக்கா
என்றால் அந்த
அக்கா தம்பி பாசம்
ஒரு சொர்க்கம் தான்..!
நேரம் காலம் பார்த்து
சண்டை போடுவதல்ல
அக்கா தம்பி பாசம்..
நினைத்த நேரம் எல்லாம்
சண்டை போடுவது தான்
அக்கா தம்பி பாசம்..!
பிறப்பு, இறப்பு, காதல், வாழ்க்கை
எல்லாம் ஒரு முறை ஆனால்
உன் மீது கொண்ட பாசம் மட்டும்
உன் தம்பி சாகும் வரை..
அக்கா..!
அக்கா தம்பியின் பாசத்திற்கு
முன்னால் அம்மா அப்பாவின்
பாசம் கூட தோற்றுப்போகும்..!
எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் கடைசி வரை
பிரியாமல் இருக்கும்
ஒரே உறவு அக்கா தம்பி
உறவு மட்டுமே..!