
அக்னி நட்சத்திர காலகட்டத்தில் செய்யக்கூடாதவை மற்றும் செய்யக்கூடியவைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம். கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். அந்த காலத்தை அக்னி நட்சத்திரம் அல்லது கத்தரி வெயில் காலம் என சொல்லுவதுண்டு. இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே மாதம் நான்காம் தேதி சனிக்கிழமை துவங்கி மே 28ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கிறது. சித்திரை மாதத்தில் உச்சம் பெற்று காணப்படும் போது வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் சுமார் 25 நாட்கள் இந்த உக்கிரகாலம் நீடிக்கும்.
அக்னி காலத்தில்செய்யக்கூடாதவை: புது வீடு புகுதல் பால் காய்ச்சுதல், செடி கொடிகளை வெட்டுதல் ,தலைமுடி காணிக்கை செலுத்துதல் ,காது குத்துதல் கிணறு வெட்டுதல், மரம் வெட்டுதல் விதை விதைத்தல் வீடு பராமரிப்பு பணிகளில் தொடங்குதல் நெடுந்தூர பயணம் பூமி பூஜை போன்றவற்றை செய்யக்கூடாது.
அக்னி காலத்தில் செய்யக்கூடியவைகள்: திருமணம் நிச்சயதார்த்தம் சீமந்தம் போன்மேலும்ரியங்களை செய்யலாம் . மேலும் இந்த காலகட்டத்தில் அக்னி பகவானை வழிபாடு செய்து நீர்தானம் அன்னதானம் கால் அணிகளை தானம் கொடுப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் அக்னி தேவனின் ஆசிர்வாதத்தை பெற முடியும்.