கோடைகாலம் ஆரம்பித்து வெயில் கொளுத்தி விட்டு எரிகிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். எப்போதும் ஏப்ரல் மாதம் தொடங்கும் இந்த அதிக வெயில் இந்த வருடம் மார்ச் மாதமே தொடங்கிவிட்டது. மேலும் நாட்கள் நகர நகர வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டேதான் இருக்கிறது. என்னதான் அவ்வப்போது மழை பெய்திருந்தாலும் வெயிலின் தாக்கம் குறைவதாக தெரிவதில்லை.
அந்த வகையில் கத்திரி வெயில் மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி அக்னி நட்சத்திர காலம் மே 28 வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே ஒன்றாம் தேதி முதலே பல இடங்களில் வெயில் அதிகரிக்க தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்ப அலை வீச வாய்ப்பு இல்லை என்றாலும் வறண்ட காற்று மற்றும் வெப்பநிலையின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. இதனால் மக்களை தேவையில்லாமல் வெளியில் வெளியே வர வேண்டாம் எனவும் கூறியுள்ளது.




