
“அங்காடித் தெரு” படம் மூலம் பிரபலமானவர், நடிகை சிந்து. இவருக்கு வயது 42. சிந்து இன்று(ஆகஸ்ட் 7) அதிகாலை 2.15 மணிக்கு மரணம் அடைந்தார். சிந்து, சமீப காலமாக மார்பக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில நாட்களாக சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், நாளுக்கு நாள் உடல் நலம் குறைந்து வந்த நிலையில் நடிகை சிந்து இன்று அதிகாலை மரணம் அடைந்தார். இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், நாடோடிகள், தெனாவட்டு, நான் மகான் அல்ல, கருப்பசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.