அசத்தல் சுவையில் கறிவேப்பிலை சிக்கன் சுக்கா..? எப்படி செய்வது?..

பொதுவாக ஞாயிறு தினம் விடுமுறை என்பதனால், பெரும்பாலானவர்களின் வீடுகளில் ஏதாவது ஒரு அசைவ உணவு இடம் பெற்றிருக்கும்.

அதில் முக்கியமான ஒன்று தான் சிக்கன். சிக்கனை குழம்பு, வறுவல், சிக்கன் 65, பிரியாணி என வகை வகையாக செய்து சாப்பிடுவது வழக்கம்.

அதுவும் சிக்கன் உணவுகள் காரசாரமாக இருந்தால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி  சாப்பிடுவார்கள்.

அப்படி கறிவேப்பிலை அதிகமாக சேர்த்து ஆரோக்கியம் நிறைந்த சிக்கன் சுக்காவை எளிமையான முறையில் அசத்தல் சுவையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக கறிவேப்பியை தூக்கியெறிபவர்களும் கூட இந்த முறையில்  சிக்கன் சுக்கா செய்து கொடுத்தால் கறிவேப்பிலையையும் விடும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு கறிவேப்பிலையின் ஆரோக்கிய நன்மைகளை பெற்றுக்கொடுக்க இது ஒரு நிறந்த முறையாகும்.

தேவையான பொருட்கள்

வறுத்து அரைப்பதற்கு தேவையானவை 

பட்டை – 1

இன்ச் கிராம்பு – 2

ஏலக்காய் – 3

சோம்பு – 1 தே.கரண்டி

சீரகம் – 1 தே.கரண்டி

மிளகு – 1 மேசை்கரண்டி

கறிவேப்பிலை – 1/2 கப்

தாளிப்பதற்கு தேவையானவை 

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 இன்ச் (துருவியது)

பச்சை மிளகாய் – 3 (கீறியது)

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)

உப்பு – சுவைக்கேற்ப

கறிவேப்பிலை – 3

கொத்து

மல்லித் தூள் – 1 தே.கரண்டி

எலும்பில்லாத சிக்கன் – 1/4 கிலோ கிராம்.

செய்முறை

முதலில் சிக்கனை சுத்தம் செய்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.

பின்னர்  அதனுடன் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிரவிட வேண்டும்.நன்றாக ஆறியதும் ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில்  வைத்து,  எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு, துருவிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு நன்றாக வருத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு அதில்  மஞ்சள் தூள் மற்றும் சின்ன வெங்காயத்தையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி வெங்காயம் பொன்றிநிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் கறிவேப்பிலையை சேர்த்து, அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை பொடி மற்றும் மல்லித் தூள் ஆகியவற்றையும் போட்டு மிதமான தீயில் நன்றாக கிளறிவிட வேண்டும்.

அதன் பின் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனையும் சேர்த்து நன்றாக  கிளறி விட்டு மூடி வைத்து 10 நிமிடங்கள் வரையில் மிதமான தீயில் வேகவிட்டு  இறக்கினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த  கறிவேப்பிலை சிக்கன் சுக்கா தயார்.

Read Previous

இனி, வீட்டில் இருந்தே வாக்காளர் அட்டையை ஆன்லைனில் Apply பண்ணலாம்..!!

Read Next

அவகாடோ ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular