மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் மஞ்சு வாரியர். எக்கச்சக்கமான படங்களில் நடித்த இவர் ஒரு கட்டத்தில் படங்களில் நடிப்பதை மொத்தமாக நிறுத்தி கொண்டார்.
இடைவெளிக்கு பிறகு அவ் ஓல்ட் ஆர் யூ என்ற படத்தின் மூலம் அடுத்த இன்னிங்ஸை தொடங்க மீண்டும் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இதை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் படத்தில் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்.
இதை தொடர்ந்து அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்தார். இப்படியான நிலையில் மஞ்சு வாரியர் அளித்த பேட்டி ஒன்றில் அசுரன் படத்தில் நீங்கள் நடிக்க யார் காரணம்? என்ற கேள்வி கேட்கப்பட்டது,
அதற்கு பதிலளித்த மஞ்சு வாரியார், எனக்கு முதலில் நடிகர் தனுஷ் தான் போன் செய்து இப்படி ஒரு கதை இருக்கிறது, நீங்க இந்த கதாபாத்திரத்தில் நடிங்க.. உங்களுக்கு சரியா இருக்கும் என்று கூறினார், அதன் பின் இயக்குனர் வெற்றிமாறன் என்னிடம் கதை கூறினார்.
நான் இந்த படத்தில் நடிக்க முழு காரணம் நடிகர் தனுஷ் தான் என்று தெரிவித்தார்.