இன்றைய காலகட்டங்களில் கோவிலில் கூட அசைவங்கள் வழங்குவதுண்டு சில கோவில்களில் சைவமாக பொங்கல் புளியோதரை இப்படி உணவுகளும் பல கோவில்களில் அதாவது முனியப்பன் மதுரவீரன் மற்றும் அய்யனார் கோவிலில் கிடாவெட்டி அங்கு கறி விருந்து வழங்குவது உண்டு.
இப்படி இருக்கும் பட்சத்தில் அசைவ உணவு சாப்பிட்ட பிறகு கோவிலுக்கு செல்வது சரியா தவறா? அல்லது நல்லது கெட்டதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும், கோவிலுக்கு செல்லும்போது உடலும் மனமும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க வேண்டும், முடிந்தவரை அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், அசைவம் சாப்பிடுவதனால் சூட்சம ஆற்றலை குறைக்கிறது இதனால் மனதை ஒருநிலைப்படுத்த முடியாது என்று கூறுகின்றனர், தவிர்க்க முடியாத சூழலில் வெற்றிலையின் காம்பை பறித்து தனது வாயில் போட்டு மென்று விட்டு செல்லலாம், மேலும் அசைவம் சாப்பிட்டு மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழித்து தலை குளித்த பின்பு கோவிலுக்கு செல்வது மன அமைதியையும் உடல் ஆரோக்கியத்தையும் தருகிறது என்று நம்பப்படுகிறது..!!