
திரையரங்கில் நம் திரைப்படப் பார்க்க செல்லும் பொழுது அன்றைய நாட்களில் திரைப்படங்கள் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு டிவிடி மற்றும் விசிடி கேசட்டுகளாக வெளியிடப்பட்டு வரும் ஆனால் இன்றைய அளவில் ஒவ்வொருவரின் கையிலும் செல்போன்கள் அதிகளவில் உள்ளது.
ரசிகர்கள் என்ற பெயரில் நாயகர்கள் தோன்றும்போது அதை வீடியோ அல்லது போட்டோ எடுத்து மகிழ்ச்சி கொள்கின்றனர்.முதல் நாள், முதல் காட்சி கொண்டாட்டம் என பதிவிடப்படும் வீடியோக்கள் ஏராளம். இவை பெரும்பாலும் திரையரங்க நிர்வாகத்தால் தடுக்க இயலாத சூழ்நிலையில் உள்ளது. ஏனென்றால் இவர்களின் செயலை தடுக்க படத்தை நிறுத்தினால் ரசிகர்கள் ஆத்திரத்தில் என்ன செய்வார்கள் என்ற பயம் திரையரங்கு உரிமையாளர்களுக்கு உண்டு.
அவ்வாறான சர்ச்சை செயல்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் வருகின்றது. இந்நிலையில் திரைப்படத்தை நாம் பார்க்க செல்லும் போது திரையில் ஒளிபரப்பு செய்யப்படும் காட்சிகளை செல்போனில் போட்டோ அல்லது வீடியோவாக எடுத்து அதை சமூக வலைதளங்களில் பரப்பினால் அவை சினிமோ க்ராஃபிக் சட்டப்படி குற்றமாக கருதப்படுகிறது. அதன்படி குறைந்தபட்சமாக நமக்கு மூன்று லட்சம் அபராதத்துடன் மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
நாம் இன்றளவில் பார்க்கும் பல வீடியோக்கள் திரையரங்கில் எடுக்கப்பட்டாலும் பின்னோட்டங்களில் அவை ஒழுங்குபடுத்தப்படும் பட்சத்தில் கட்டாயம் தண்டனைக்கு வழிவகை செய்யும். நகரங்களில் எந்நேரமும் மக்கள் வரவேற்புடன் இருக்கும் திரையரங்குகளில் வேலை பார்க்கும் பணியாளர்கள் திரையில் படம் பதிவு செய்யப்படும் போது நமது செயல்பாடுகளை கண்காணித்து எச்சரிக்கும் நிகழ்வுகள் நடக்கும் ஒரு சில இடங்களில் அவை மோதலுக்கு வழிவகை செய்து வருகின்றது.