
லால்குடி அருகே தீராத வயிற்று வலி காரணத்தால் அவதிப்பட்டு வந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள கொன்னைகுடி கிராமத்தை சார்ந்தவர் சூசை ராஜ் என்பவரது மகன் வில்பர்ட் ராஜ் (வயது 18). இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதற்கு அவர் பல்வேறு சிகிச்சை எடுத்து வந்துள்ளார் ஆயினும் வயிற்று வலி குறைந்தபாடில்லை. இதனால் மனமுடைந்த வில்பர்ட் ராஜ் கடந்த 23ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார்.
இதனை தொடர்ந்து உறவினர்கள் அவரை மீட்டு லால்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபாய் வில்பர்ட் ராஜ் உயிர் இழந்தார், அவரது தந்தை சூசை ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,