அஞ்சறை பெட்டியில் இவ்வளவு பயன்கள் ஒளிந்து இருக்கிறதா..??

Oplus_131072

அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் முக்கியமான பொருள்- பயன்கள்

கடுகு

கடுகு இல்லாமல் தாளிப்பு கிடையாது. உடலில் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் குணம் கடுகுக்கு உண்டு. கடுகு நரம்பு மண்டல செயல்பாடு, வளர்சிதை மாற்றத்துக்கு உதவக்கூடியது.ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடியது. நார்ச்சத்து கொண்டது. கால்சியம், மாங்கனீசு, தாமிரம், இரும்பு ,செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புகளை கொண்டிருக்க கூடியது. இவை எலும்புகளை வலுப்பெற உதவுகிறது.

பெருங்காயம்

இதன் வாசனை சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு அலர்ஜியாகவும் இருக்கும். பெருங்காயத்தை பருப்பு சேர்த்த குழம்பு, கூட்டு போன்றவற்றிலும் வாய்வு உண்டாக்கும் பொருள்களிலும், ரசம் வகையறாக்களிலும் சேர்ப்போம்.

பெருங்காயம் உடலில் நச்சு நீக்கும் நொதிகளின் அளவை அதிகரிக்க உதவுகிறது. குடல் வாய்வுக்கு எதிராக செயல்படுவதால் உடலில் வாய்வு கோளாறு உண்டாக்காமல் தடுக்கப்படுகிறது. பெருங்காய வாசனை பிடிக்காதவர்கள் பருப்பை வேகவைக்கும் போதே மிளகு அளவு பெருங்காயத்தை சேர்த்துவிடலாம். உடலில் வாய்வுக்கோளாறு வரக்கூடாது என்பவர்கள் இனி பெருங்காயத்தை நிறைவாக சேர்க்கலாம்.

மிளகு

இது காரத்துக்கு சேர்க்கப்படும் மணமான காரமான பொருள். இதை பெரும்பாலும் அப்படியே சாப்பிடாமல் பொடியாக்கி சேர்ப்பது வழக்கம். மிளகுப்பொடி உமிழ்நீரை பெருக்கி செரிமானத்தை துரிதமாக்கும்.

உடல் சூட்டை தணிக்கும். ஜலதோஷம், சளி, தொண்டை பிரச்சனைகள் வரவிடாமல் தடுக்கும். விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால் தான் பத்து மிளகு இருந்தாலும் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்று சொல்கிறார்கள்.

தாளிப்பு பொருள்களில் சேர்க்க முடியாது. ஆனால் ரசம், குழம்பு போன்றவற்றில் மிளகு தேவைப்படும். அதே நேரம் பாலில் சிட்டிகை மிளகுப்பொடி சேர்த்து குடித்தாலும் போதும்.

சீரகம்

தாளிப்பு பொருள்களில் சீரகத்துக்கு தனி இடம் உண்டு. இதன் வாசனையை நுகர்ந்தாலே ஜீரணம் ஆகிவிடும் என்று சொல்லும் அளவுக்கு செரிமானத்தை சீராக்கும் தன்மை சீரகத்துக்கு உண்டு. நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்க்க உதவும்.

உண்ணும் உணவு செரிமானம் ஆகிவிட்டாலே உடலில் ஆரோக்கிய குறைபாடுகள் நேராமல் பெருமளவு தடுக்க முடியும். இனி பொரியல், அவியல், கூட்டு, குழம்பு என்று தாளிப்பு பொருள்கள் அனைத்திலும் சீரகத்தை சேர்த்துவிடுங்கள்.

வெந்தயம்

அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் முக்கியமான பொருள் இது. ஆனால் வெந்தயத்தை எல்லா தாளிப்பு பொருள்களிலும் பயன்படுத்தலாம். பலரும் இதன் கசப்பு தன்மை உணவில் சேர்ந்துவிடும் என்று சேர்ப்பதில்லை. குழம்பு, பொரியல், கூட்டு என்று தாளிக்கும் அனைத்து பொருள்களிலும் வெந்தயத்தை சேர்க்கலாம்.

வெந்தயம் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நார்ச்சத்து மிகுந்தவையும் கூட. வெந்தயத்தை சேர்ப்பதன் மூலம் வயிற்று கோளாறுகள் உண்டாகாமல் இருக்கும். குறிப்பாக பெண்கள் மாதவிடாய்க்காலங்களில் வெந்தயத்தை அதிகம் சேர்த்துவருவதன் மூலம் உபாதையை பெருமளவு குறைத்துவிடமுடியும்.

பட்டை, கிராம்பு

இவை அசைவ உணவின் போதும் மசாலாக்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பட்டையில் அதிக சக்தி வாய்ந்த பாலிஃபினால் ஆக்ஸினேற்றங்கள் இருப்பதால் இவை உடலை ஆரோக்கியமாக பாதுகாத்து எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. மூளைக்கு நன்மை செய்கிறது. அல்சைமர், பர்கின்சன் என்னும் மறதி நோய் வராமல் தடுக்க உதவுகிறது. நீரிழிவு இருப்பவர்களுக்கும், இதய நோய், நுரையீரல் போன்ற உறுப்புகளையும் பாதுகாக்கிறது.

பட்டையைப் போன்றா தான் கிராம்பும். அசைவ உணவுக்கு பிறகு சீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது. நெஞ்செரிச்சல், குமட்டல் இல்லாமல் தடுக்கிறது. கிராம்பு உடலில் கெட்ட பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படுகிறது. கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற கிராம்பு உதவுகிறது. உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. பல்களின் மருத்துவனாக செயல்படுகிறது.

கசகசா

இன்று பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். உணவில் கசகசா சேர்ப்பதால் தூக்கமின்மை பிரச்சனை சரிசெய்யும். உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்யும் கார்டிசோல் என்னும் ஹார்மோன் அளவை குறைத்து தூக்கமின்மை பிரச்சனையை சரி செய்கிறது.

கசகசாவை அசைவ உணவுகளில் அரைத்து சேர்க்கலாம். இதை ஊறவைத்து பாலில் கலந்து குடிக்கலாம். திருமணத்துக்கு பிறகு தம்பதியருக்கு தேவையான இல்லறம் சார்ந்த வீரியத்துக்கு இவை பெரிதும் உதவக்கூடியது.

Read Previous

ஆண்மையை பெருக செய்யும் மா மருந்து..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

மனம் குழப்பத்தில் இருக்கும் பொழுது, இத மட்டும் செஞ்சா போதும்! எந்த குழப்பத்திற்கும் உடனே தீர்வு கிடைத்துவிடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular