அடக்கொடுமையே! காதலிக்காக மதம் மாறிய காதலன்..!! தலைமறைவான காதலி கர்ப்பமான செய்தி கேட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு.!!

சேலம் அருகே மாமங்கம் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் அதே பகுதியை சார்ந்த வேறு மத பெண்ணை காதலித்து வந்தார். இதனால் காதலின் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீதர் மதம் மாறி தனது பெயரையும் மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இளம் பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலனுக்கு எந்த ஒரு தகவலும் கூறாமல் சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு இடம் பெயர்ந்து சென்றார். அது மட்டுமல்லாது பெற்றோர் பார்த்து வைத்த வேறு ஒரு நபருடனும் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை அறியாத காதலர் ஸ்ரீதர் அவரைத் தேடி வந்துள்ளார்.

அப்போது அவருக்கு காதலியின் புது செல்போன் நம்பர் கிடைக்கவே அதை தொடர்பு கொண்டு காதலியிடம் பேசினார். அப்பொழுது அவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஸ்ரீதர் நகை தயாரிக்க பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து தற்கொலை  செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்கவும் அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர்  தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

விருதுநகர் அருகே பயங்கரம்..!! வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..!! விரைந்து சென்ற மீட்பு குழுவினர்.!!

Read Next

பெரும் சோகம்..!! 6 பேரை காவு வாங்கி லோடு லாரி..!! போலீஸ் விசாரணை.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular