அடக்கொடுமையே..! மனைவி மற்றும் மகளை அரிவாளால் வெட்டிய நபர்..ரயில் முன் பாய்ந்து தற்கொலை.!!. அதிர்ச்சி சம்பவம்.!!

கேரள மாநிலம் மாவலிகரை பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீ மகேஷ். இவருக்கு திருமணம் ஆகி நட்சத்திர என்கின்ற மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் தம்பதிகள் இருவரும் ஏற்பட்ட குடும்பத்தக்கராத்தில் ஆத்திரமடைந்த கணவன் ஸ்ரீ மகேஷ் மனைவி மற்றும் மகளை கொடூரமாக அறிவாளால் தாக்கினார்.

இந்த கொடூர தாக்குதலில் படுகாயம் ஸ்ரீ மகேஷின் மனைவி மற்றும் மகளை அருகில் இருந்தவர்கள் ரத்த காயங்களுடன் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் சிறுமி நட்சத்திர சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் உயிர் இழந்தார், இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினார் ஸ்ரீமகேசை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீ மகேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைப்பதற்காக காவல் துறையினர் அடைக்க சென்றனர். அப்போது சாஸ்தான்கோட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய ஸ்ரீ மகேஷ் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் மகளை அறிவாளால் வெட்டி கொலை செய்து தந்தையும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

பெரும் சோகம்..!! 6 பேரை காவு வாங்கி லோடு லாரி..!! போலீஸ் விசாரணை.!!

Read Next

அதிவேகத்தில் தறிகெட்டு வந்த லாரி: சாலையோர உணவகத்தில் புகுந்து 4 பேர் உடல் நசுங்கி பலி.!! 2 பேர் படுகாயம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular