
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் விட்டமின் மாத்திரை என்று நினைத்து ஆப்பிள் ஏர் பார்ட்ஸ் விளங்கிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இப்போது நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 52 வயதான டான்னா பார்கர் என்ற பெண்மணி தனது தோழியை நீண்ட காலத்திற்குப் பிறகு சந்திக்க சென்றுள்ளார். அப்போது இருவரும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கின்றனர். தனது விட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள நினைத்திருக்கிறார். அப்போது தவறுதலாக விட்டமின் மாத்திரைகள் என்று நினைத்து ஆப்பிள் பாரட்ஸை விழுங்கி விட்டார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சையின் மூலம் ஏர் பார்ட்ஸ் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுவரை 27 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.