அடப்பாவமே.. கொசுவர்த்தியால் முன்னாள் தலைமை ஆசிரியை பலி..!! தாம்பரத்தில் சோகம்.!!

சென்னையில் உள்ள தாம்பரம் மாடம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் லீலாபாய் (வயது 75). இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆவார் .

தற்பொழுது உடல்நல குறைவின் காரணமாய் வீட்டிலிருந்து பள்ளி சார்ந்த பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார் லீலாபாய்,அப்பொழுது வீடு முழுவதும் தீ பற்றி எரிந்து லீலாபாய் பரிதாபமாய் உயிரிழந்து உள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்  அவரின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொசுவர்த்தி ஏற்றி வைத்த போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்ந்து தொடர் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Read Previous

கடலூர் ரௌடியை தூக்கிய பாண்டிச்சேரி போலிஸ்:..!!நடுரோட்டில் கதறல் சம்பவம்.!!

Read Next

அவுங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்? – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular