
பொதுவெளியில் இதைப் போன்ற கேள்விகளை கேட்க தயங்குவதால் அதிகமான கருக்கலைப்புகள் நடக்கின்றன. கருப்பை ஒன்றும் குப்பை கூடை அல்ல அடிக்கடி கொட்டி கழுவதற்கு என்றும் அது மிகவும் மென்மையானது புனிதமானது கருத்தரித்தலை தவிர்க்க நிறைய வழிமுறைகள் உள்ளன என்கிறார்கள் மருத்துவர்கள். அது பற்றிய தொகுப்பை அடுத்து பார்க்கலாம்.
1. விந்து வரும் போது பிறப்புறுப்பை வெளியே எடுத்து விடுவது சிறந்த பலனை கொடுக்கும் இதனால் கரு உண்டாவதை தவிர்க்கலாம்.
2. மாதவிடாய் வருவதற்கு முன்பு பின்பு என்று சில நாட்கள் வரைமுறை உண்டு ஆனால் மூடு எப்ப வரும் என்று கணிக்க முடியாது இதில் சக்ஸஸ் ரேட் மிகவும் குறைவு பாதுகாப்பான நேரங்களில் உடலுறவு கொள்வது மிகவும் நல்லது.
3. கரு உண்டாகாமல் இருக்க கருத்தடை மாத்திரைகள் எடுக்கலாம் ஆனால் இது உடலுக்கு பக்க விளைவுகள் ஏற்ப டுத்துவதற்கு வாய்ப்பு உண்டு இதனால் உடலில் பல பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு.
4. பெண்கள் காண்டம் பயன்படுத்துவதால் கரு உண்டாவதை தவிர்க்கலாம்.
5. ஐ யு சி டி எனப்படும் சாதனத்தை பயன்படுத்துவதன் மூலம் கருத்தரித்தலை நன்கு தடுக்கலாம் ஆனால் அதிக ரத்தப்போக்கு மற்றும் உடல் எடை கூடுதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.
6. ஆண்கள் காண்டம் பயன்படுத்துவதால் கருத்தரித்தலை தடுக்கலாம். ஆண்கள் காண்டம் பயன்படுத்துவதால் எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது ஆனால் தரமான காண்டம் உபயோகிக்க வேண்டும்.