
தோள்பட்டையில் வலி ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். காயங்கள், தவறான முறையில் உட்காருவது/படுப்பது அல்லது சுளுக்கு ஆகியவற்றால் ஏற்படுகிறது. ஆனால் தொடர்ந்து வலி இருந்தால் அது பித்தப்பை கற்கள் பிரச்சனையாக கூட இருக்கலாம். இது மட்டுமல்லாமல் நுரையீரல் வீக்கம், நிமோனியா, கல்லீரல் பாதிப்புகள் ஆகிய காரணங்களினாலும் தோள்பட்டை வலி ஏற்படலாம். எனவே தோள்பட்டையில் தொடர்ந்து வலி இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.