அடிக்கடி நகம் கடிக்கிறீர்களா.? இது உங்களுக்கு தான்.!! கொஞ்சம் உஷாரா இருங்க..!!

பெரும்பாலோருக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளது. இதற்கு குழந்தைகள், பெரியவர்கள் என்ற வித்தியாசம் கிடையாது. சிலர் பொழுதுபோக்கிற்காக நகம் கடிக்கிள்றனர் சிலரோ கோபம் பதற்றம் உள்ளிட்டவை ஏற்படும்  போது நகம் கடிப்பார்கள். இந்த பழக்கம் மிக மோசமான விளைவினை ஏற்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.

அடிக்கடி நகம் கடிப்பதால் பாக்டீரியா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது. இது இரைப்பை. குடலில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். வாய் வழியாக செல்லும் இந்த தொற்று குடற்புழு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது. சிலர் நகத்தை கடித்து கடித்து அருகில் இருக்கும் சதைப்பகுதியையும் சேர்த்து கடிப்பார்கள். இதனால் ரத்தம் வந்து அந்த இடத்தில் நோய் தொற்று அதிகரிக்கும்.

அதே தொற்றாக கைகளுடன் நாம் சாப்பிடும் போது அது உள்ளே சென்று பாதிப்பையும் ஏற்படுத்தும்.

இப்படி நகம் கிடைக்கும் பழகத்தில் இருந்து விடுபட என்ன செய்யலாம்..?

கடிக்க முடியாத அளவிற்கு நகங்களை அடிக்கடி வெட்டி விட வேண்டும். கோபமாக, பதட்டமாக வரும் போது நகம் கடிக்கிறீர்கள் என்றால் அதை கவனித்து அந்த நேரத்தில் மனதை திசை திருப்ப வேற ஏதாவது முயற்சி செய்யலாம்.

அதாவது டிரஸ் பால் உபயோகிப்பது, பிடித்த பாடல்கள் அல்லது வீடியோக்களை கேட்பது, சிறிது தூரம் நடை பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்டவை இந்த பழக்கத்தை மாற்றிக்கொள்ள உதவுகிறது.

Read Previous

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க பெஸ்ட் 4 உணவுகள்..!!

Read Next

மதுபானம் அருந்திவிட்டு கீரை சாப்பிடலாமா?; உண்மை என்ன..? விபரம் உள்ளே.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular