
இன்றைய காலகட்டங்களில் நமது உடலில் பல வகையான நோய்கள் வருகிறது, அதிலும் மலச்சிக்கல் என்பது இன்று 100-இல் 80 பேருக்கு உள்ளது அப்படி இருக்கும் பட்சத்தில் மலச்சிக்கலை சரி செய்வதற்கு சில மருத்துவ முறைகளும் இயற்கை மருத்துவம் உள்ளது.
கடுக்காயை இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் சுடுதண்ணியில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சில நாட்களிலேயே மலச்சிக்கல் நிவர்த்தியாகும் மேலும் வயிறு, வாய், குடல், பகுதிகளில் வெகு நாட்களாக ஆறாமல் இருந்த புண்கள் கூட மிக விரைவில் ஆறிவிடும், மேலும் இந்த கடுக்காயானது உடல் இயக்கத்தை தூண்டி செரிமானத்தை சீராக்கும் செரிமான பிரச்சனையில் இருந்து உடலை ஆரோக்கியமாகவும் மலச்சிக்கலில் இருந்து இயற்கை முறையில் மலம் கழிப்பதற்கும் வழிவகிக்கும், இந்த கடுக்காயானது துவர்ப்பு சுவை உடையதனால் இது நீரழிவு நோய்க்கு மிகச்சிறந்த மருந்தாகவும் இது லேகியம் போன்ற சுவையையும் தரும்..!!