
செரிமான பிரச்சனை ஏற்படுவதற்கான காரணத்தையும் அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் அதற்கு குடி கசாயம் எப்படி தயாரிப்பது எனவும் குறிப்பிட்டுள்ளார்கள் மருத்துவர்கள்…
இன்றைய சூழலில் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையின் காரணமாக பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன குறிப்பாக இளம் தலைமுறை தொடங்கி வயதானவர்கள் வரை பலருக்கு செரிமான கோளாறு காணப்படுகிறது இதற்கு தீர்வு காண்பதற்காக சிலர் மருந்துகளை உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகிறது..
சிலருக்கு எண்ணெய் சேர்க்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் செரிமானம் ஆவதில் பிரச்சனை இருக்கும் மேலும் அடிக்கடி ஏப்பம் மற்றும் வயிறு உப்புசம் தொல்லையும் நிறைய பேருக்கு இருக்கும் இவை அனைத்தும் செரிமான கோளாறு அல்லது பேட்டி லிவர் பிரச்சனையில் காரணமாக அமைகிறது. இந்த இரண்டு பிரச்சனைக்கும் தீர்வு அளிக்கக்கூடிய மருந்து ஒன்றை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம் என மருத்துவர் உஷா நந்தினி அறிவுறுத்துகிறார் அதன்படி ஒரு ஏலக்காயை எடுத்து நன்றாக தட்டி கொள்ள வேண்டும் இத்துடன் இரண்டு சிட்டிகை சுக்கு பொடி மிளகு பொடி மற்றும் திப்பிலி பொடி ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் குறிப்பாக இவற்றை தேநீர் போன்று தயாரித்து உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பாக குடிக்க வேண்டும் இதனை தொடர்ச்சியாக குடித்து வந்தால் செரிமான கோளாறு தொல்லை நீங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்…!!!