தமிழகத்தில் அடிப்படை கல்வி வழங்கும் மத்திய அரசு திட்டம் செயல்பட்டு வருகிறது, இதனை தொடர்ந்து அடிப்படைக் கல்வி சிறப்பம்சங்களையும் தமிழக அரசு எடுத்துரைத்துள்ளது..
இந்தியாவில் நான்கில் ஒரு இந்தியருக்கு கல்வி அறிவு இல்லாத காரணத்தால் படிக்கவும் எழுதவும் தெரியாமல் இருக்கின்றனர், அவர்களுக்கு எழுத்தறிவு பயிற்றுவிக்க 2022 மத்திய அரசு புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலகட்டத்தில் 10 லட்சம் பேருக்கு எழுத்தறிவு பயிற்றுவிப்பு பயிற்சி நடத்தி அதில் கல்வி வழங்கப்பட்டது, நடப்பு கல்வி ஆண்டில் எழுத படிக்க தெரியாத 6.14 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர், சுமார் 30,814 தன்னார்வலர்கள் உதவிகளுடன் இவர்களுக்கு கற்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மேலும் அடிப்படைக் கல்வி வழங்குவதன் மூலம் நாட்டின் கல்வி வளர்ச்சியை உயர்த்த முடியும் என்றும் சிறந்த நாடாக மாற்ற முடியும் என்று நோக்கத்தின் அடிப்படையில் புதிய பாரத எழுத்தில் திட்டத்தை மத்திய அரசு 2022 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது…!!!




