
அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்திய வடகொரியா.
கொரிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் உள்ள கடலில் குருஸ் என்ற ஏவுகணைகளை வடகொரியா அடுத்தடுத்து செலுத்தியுள்ளதால் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.
வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்க பொருளாதார தடைவிதித்தது. இருப்பினும் வடகொரியா அதையும் தாண்டி ஏவுகணை சோதனைகளில் அவ்வப்போது ஈடுபட்டு வருகின்றது. வடகொரியா பதட்டத்தை ஏற்படுத்தும் போதெல்லாம் அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து கடல் பகுதிகளில் ராணுவ பலத்தை அதிகரித்துக் கொண்டது.
கடந்த புதன்கிழமை அன்று தென்கொரியா பகுதிகளில் அணு ஆயுத ஏவுகணைகளை செலுத்தும் ஆற்றல் படைத்த அமெரிக்காவின் நீர்முழ்கி கப்பல் காணப்பட்டது. இதனால் வடகொரியா ஏவுகணைகளை வீசி எச்சரித்துள்ளது.
இதற்கிடையே அமெரிக்கா, தென்கொரியாவில் போர் கப்பல் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், குண்டுகள் போன்றவை தென்கொரியா கடற்கரையில் காணப்படுவது நாங்கள் பயன்படுத்தும் அளவுகோல் என வடகொரிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தற்போது வடகொரியா குரூஸ் ஏவகணைகளை தொடர்ந்து வீசியுள்ளது. இந்த குருஸ் ஏவுகணைகள் வழிகாட்டுதல் ஏவுகணை என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஏவுகணை தரை மற்றும் கடலில் உள்ள எதிரிகளின் இலக்குகளை கணக்கிடும் வல்லமை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.