
சென்னை : மும்பை ரயில்வேக்கு ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்கப்படுவதால் சென்னைக்கு ஒதுக்கப்பட்ட ஏசி புறநகர் மின்சார ரயில் தயாரிக்கும் பணியை அடுத்த நிதியாண்டில் அதாவது 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையாக சென்னை ஐ சி எப் திகழ்கிறது இங்கு பல்வேறு வகைகளில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட உள்ளன தற்போது இங்கு வந்து பாரத் ரயில் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது இது தவிர ஐசிஎஃப் என்னும் நவீன பெட்டிகள் ஏசி மின்சார ரயில் பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ரயில் பெட்டிகளை தயாரிக்கப்படுகின்றன இதன் ஒரு பகுதியாக தெற்கு ரயில்வேக்கு இரண்டு ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்கவும் திட்டமிட்டுள்ளது இவற்றில் ஒரு ரயில் வரும் டிசம்பரில் தயாரித்து வழங்கப்படும் என்று ஐசிஎஃப் தயாரிப்பில் கடந்த மாதம் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த ரயில் தயாரிப்பு பணி மேலும் தாமதம் ஏற்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது அதாவது அடுத்த நிதியாண்டில் தயாரிப்பு பணி தொடங்க திட்டமிட்டுள்ளது, இது குறித்து சென்னை ஐ சி எப் அதிகாரிகள் சென்னை ஐ சி எஃப் தற்போது நவீன வகையான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன, மேலும் ஏசி மின்சார தயாரிப்பு பணியும் நடைபெறுகிறது இது வந்தே பாரத் போல் இருப்பதால் ரயிலின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை எளிதாக சென்று வர இயலும் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனுடையது தானியங்கி கதவுகள் ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பு வசதிகளும் உள்ளன அனைத்து பெட்டிகளும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என ஐசிஎஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது..!!