
தமிழகத்தில் உணவு மற்றும் கூட்டுவுத்துறைகள் வழியாக மக்களுக்கான அத்தியாவசிய பொருட்களை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் அரசாங்கம் கொடுத்து வருகின்றது . கடந்த 2021 ம் ஆண்டு தமிழக அரசு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அத்திட்டத்தின் வழி தேர்வு செய்யப்பட்ட ரேஷன் அட்டை குடும்பதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக ரூபாய் 1000 வழங்கி வந்தார்கள்.
இதனையொட்டி பலர் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தார்கள். விண்ணப்பங்கள் அதிகமாக குவிந்ததால் புதிய அட்டை வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. தற்போது சுமார் 2 லட்சத்து 80 குடும்ப அட்டை விண்ணப்பங்கள் இருக்கும் நிலையில், தமிழக அரசு அடுத்த மாதம் முதல் புதிய கார்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.