மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவின் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் இன்று 6 மணி நேரத்தில் 300 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரணத்தினால் சாலைகளில் மழை நீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. இந்த கனமழையின் காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை வழி போக்குவரத்து மற்றும் ரயில் சேவைகள் போன்றவை முற்றிலும்மாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த கனமழையின் காரணமாக மும்பை நகரில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புறநகர் ரயில் சேவை, விமான சேவை ஆகியவை இந்த கனமழையின் காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ள காரணத்தினால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். தற்போது வரை 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கனமழை குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும் மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பொது மக்களுக்கு தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளார், அடுத்த மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் கடற்கரை அருகில் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மழை வெள்ள நீர் தேங்கி உள்ள பகுதிகளில் அந்த நீரை அப்புறப்படுத்துவதற்கான போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்து உள்ளார்.