ஜிவி பிரகாஷ் சைந்தவி ஜோடி விவாகரத்து செய்தியே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அடுத்ததாக பிரபல பாலிவுட் ஜோடி சைப் அலிகான்- கரீனா ஜோடி விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சினிமா துறையின் சிலருடைய விவாகரத்து என்பது சாதாரண ஒன்றாகிவிட்டது. பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை பிரபலமான பல நடிகைகள் சமீப காலமாக விவாகரத்து செய்து வருகின்றனர். இயக்குனர் விஜய் -அமலாபால் தொடங்கி தனுஷ்- ஐஸ்வர்யா சமந்தா -நாக சைதன்யா என தற்போது ஜிவி பிரகாஷ் -சைந்தவி வரை பல பிரபலங்கள் விவாகரத்து செய்துள்ளனர்.
இவர்களது விவாகரத்து குறித்து இணையங்களிலும் பல்வேறு தகவல்கள் உலா வந்து கொண்டு தான் உள்ளது. இந்நிலையில் ஹிந்தி நடிகர் சைப் அலிகான் தனது மனைவி கரீனாவை விவாகரத்து செய்யப் போகிறாரா..? என்ற தகவல் தற்பொழுது சமூக வலைதளங்களில் பூகம்பமாய் வெடிக்க தொடங்கியுள்ளது.
இதற்கு காரணம் நடிகர் சைப் அலிகான் தனது மனைவி கரீனா என பெயரை டாட்டுக்குத்தி இருந்தார். தற்பொழுது அந்த பெயரை நீக்கிவிட்டு திரிசூலமாக மாற்றி உள்ளார். கையில் இருந்த பெயரை அழித்தது ஏன்..? இருவரும் விவாகரத்து செய்கிறார்களா.? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.