அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவி வருவதால் அடுத்த 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆரஞ்சு அலர்ட்:

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக நிலையில் உள்ளது என காற்றின் தரம் குறித்த ஆராய்ச்சி அமைப்பு தெரிவிக்கிறது. அதனால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. அதன் காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் சாலையில் கடுமையான பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். கடுமையான பனி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்  டெல்லியில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. அது தவிர ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் மாநிலங்களில் மிக அடர்ந்த மூடுபனி நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Read Previous

வங்கியில் வேலை வேண்டுமா? HDFC வங்கியில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு..!!

Read Next

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக டபுள் ஜாக்பாட் – வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular