அடேங்கப்பா இவ்வளவு சத்துக்கள் நிறைந்ததா உப்பு கண்டம்..? தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!!

தற்பொழுது இஸ்லாமியர்களுக்கு புனிதமிகு ரமலான் மாதம் தொடங்கி உள்ளது, இந்த மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் அதிகாலையில் எழுந்து உணவு சாப்பிட்டு பகல் நேரம் முழுவதும் தண்ணீர் கூட குடிக்காமல் இறைவனுக்காக விரதம் இருப்பார்கள். மாலை மீண்டும் உணவு சாப்பிட்டு தங்களது விரதத்தை முடித்துக் கொள்வார்கள். 30 நாட்களுக்கு இந்த நோன்பினை அவர்கள் கடைபிடிப்பார்கள்.

இந்த ரமலான் மாதம் நோபின் பொழுது முஸ்லிம்கள் அதிக அளவில் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகளில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் இந்த உப்பு கண்டம். ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி அல்லது கோழி இறைச்சியில் உப்பு மற்றும் மசாலாக்கள் சேர்த்து வெயிலில் காயவைத்து அதை பதப்படுத்தி உப்பு கண்டம் செய்யப்படுகிறது. இது புரதத்திற்கான சிறந்த ஆதாரமான உணவாக திகழ்கிறது .இந்த உப்பு கண்டத்தின் எடைக்கு சமமான அளவில் புரோட்டின் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீங்கள் மூன்று  கிராம் உப்பு கண்டம் சாப்பிட்டால் அதில் 50 கிராம் புரதம் கிடைக்கும். மேலும் உப்பு கண்டத்தில் உப்பு அதிக அளவில் இருப்பதால் ரமலான் மாதம் ஒன்றின் போது தண்ணீர் குடிக்காமல் இருப்பவர்களுக்கு அதிக நீர் இழப்பு ஏற்படாமலும் இது தடுக்க உதவி செய்கின்றது அதே நேரம் உயர் ரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இதை தவிர்த்துக் கொள்வது மிகவும் நன்று.

ஏனென்றால் இதில் இருக்கும் அதிகப்படியான உப்பு சத்து உயர் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு சிறுநீரக பாதிப்பை அதிகப்படுத்தவும் எனவே குறிப்பிட்ட அளவு இதனை பயன்படுத்தி வந்தால் நாம் உடலில் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

Read Previous

குறைந்த ரத்த அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா..? இந்த உணவை சாப்பிட்டாலே போதும்..!!

Read Next

சரி வர தாய்ப்பால் சுரக்க எளிய உணவு வகைகள் இதோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular