
வருத்த சூரியகாந்தி விதைகள் உடலுக்கு மிகவும் நல்லது. சூரியகாந்தி விதைகளில் அதிக அளவு புரதம் கால்சியம் இரும்பு மற்றும் துத்தநாகம் உள்ளது இதை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் பற்றி இங்கே பார்க்கலாம்..
சூரியகாந்தி விதைகளில் மெக்னீசியம் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளது இது வலுவான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது.
சூரியகாந்தி விதைகளில் ஃபோலேட் உள்ளது இது இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு முக்கியமானது மற்றும் குழந்தைகளின் நரம்பு குழாய் குறைபாடுகளை தடுக்க உதவுகிறது அவை கருவுறுதலை அதிகரிக்க கூடிய துத்தநாகத்தையும் கொண்டு இருக்கின்றது..
சூரியகாந்தி விதையில் வைட்டமின் ஈ உள்ளது இது ஆரோக்கியமான தோல் மற்றும் முடியை மேம்படுத்தும்.
சூரியகாந்தி விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து மெக்னீசியம் பாலிப்பினார்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன அவை இன்சுலின் எதிர்ப்பை குறைக்கவும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கும் உதவுகிறது..
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் பிளவனாய்டுகள் போன்ற ஆண்டிஆஸிடன்டுகள் உள்ளன..
சூரியகாந்தி விதைகள் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரத உள்ளடக்கம் காரணமாக திருப்திகரமான சிற்றுண்டியாக இருக்கலாம்…!!