• September 14, 2024

அடேங்கப்பா.. நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா..!! சும்மா ஹீரோ ரேஞ்சுக்கு இருக்காங்களே..!! வைரல் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் 1999 ஆம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த “கள்ளழகர்” என்கின்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் லைலா. அதனை தொடர்ந்து அவர் சூர்யா, பிரபுதேவா, விக்ரம், அஜித் என்று பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமாக வலம் வந்தார். இவர் தமிழ் மட்டும் இன்றி ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கண்ணக்குழி அழகி, சிரிப்பழகி என ரசிகர்களால் புகழப்பட்ட நடிகை லைலா 2006 ஆம் ஆண்டு ஈரான் தொழிலதிபரான மெஹதீன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின் குடும்பம், குழந்தை என செட்டிலானார்.  இதனை தொடர்ந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது மீண்டும் ரீஎன்றி கொடுத்து நடிகை லைலா படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார்.

அவர் தற்போது விஜயின் “கோட்”, ஆதி நடிப்பில் உருவாகி வரும் “சப்தம்” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் அன்னையர் தினத்தன்று அவர் தனது மகன்களுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் நடிகை லைலாவிற்கு இவ்வளவு பெரிய மகன்களா..? நம்பவே முடியவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/C63anfdow_q/?utm_source=ig_embed&ig_rid=d5fd2288-686c-4b73-8dc1-6801a8dadd76

Read Previous

அட.. அருந்ததி படத்தில் நடித்த குட்டிபொண்ணா இது..!! ஆளே மாறி இப்போ எப்படியிருக்காங்க பார்த்தீங்களா..!!

Read Next

கள்ளக்காதல் வயப்பட்ட இளைஞர் செருப்பு மாலையுடன் ஊர்வலம்..!! 5 பேரின் சிறுநீரை குடிக்கவைத்து அதிர்ச்சி செயல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular