அடேங்கப்பா.. நாய்கள் பயணம் செய்ய தனித்துவ விமான சேவை..!! ஒரு டிக்கெட்டின் விலை இத்தனை இலட்சமா..?

உலகில் முதன்முறையாக நாய்கள் பயணம் செய்யும் வகையில் பல வசதிகளுடன் தனித்துவமான விமான சேவையை ஃபார் ஏர் நிறுவனம் அறிமுகம் செய்து உள்ளது.

இதில் நாய்களுக்கு என சௌகரியமான இருக்கை, படுக்கை வசதி, டயப்பர்களும் வழங்கப்பட்டு உள்ளது. விமான சேவையில் நாய்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் அதற்கு துணையாக உரிமையாளரும் பயணம் செய்யும் வகையில் விமானம் ஆனது வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஒவ்வொரு விமானத்திலும் 15 நாய்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் பயணம் செய்யலாம். தற்போது  நியூயார்க் – லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க் – லண்டன்  இடையே இந்த விமான சேவை தொடங்கப்பட்டு உள்ளது. ஒரு டிக்கெட் விலை உள்நாட்டு பயணத்திற்கு 6000 டாலர் இந்திய மதிப்பில் ரூ.4,98,352 வெளிநாட்டு பயணத்திற்கு 8000 டாலர் இந்திய மதிப்பில் ரூ.6,64,470 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Read Previous

பெண்கள் நீராடி உடை மாற்றுவதை நேரலையில் பார்த்து ரசித்த காமுகன்..!! செல்போன் முழுதும் ஆபாச காட்சிகள்..!!

Read Next

மூன்றே நாட்களில் உயிரைப்பறிக்கும் புதிய வைரஸ்..!! ஆய்வுக்காக சீனாவில் உருவாக்கப்பட்ட கிருமி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular