அட்டகாசமான கேரளா ஸ்டைல் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்வது எப்படி..!!

நம்மில் பலருக்கும் உருளைக்கிழங்கில் தயாரிக்கப்பட்ட உணவு என்றாலே அலாதி பிரியம் இருக்கும். கிட்டத்தட்ட சிக்கன் சுவையில் இருக்கும் உருளைக்கிழங்கை வைத்து சுவையான ரோஸ்ட் செய்தால் மிகவும் சுவையாகவே இருக்கும். இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் கேரளா மக்களின் ஃபேவரட் உணவு வகைகளை சார்ந்த ஒன்றாகும். இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்யும் வழிமுறைகளை காண்போம்.

தேவையான பொருட்கள்

 • வேக வைக்க உருளைக்கிழங்கு 2 நறுக்கியது
 • மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
 • உப்பு சிறிதளவு
 • ரோஸ்ட் செய்ய தேங்காய் எண்ணெய் 3 தேக்கரண்டி
 • சோம்பு 1/4 தேக்கரண்டி.
 • இஞ்சி  துண்டு(பொடி பொடியாக வெட்டியது)
 • கருவேப்பிலை ஒரு கொத்து
 • பெரிய வெங்காயம் ஒன்று (நறுக்கியது)
 • பூண்டு 6 முதல் 8 (பொடி பொடியாக நறுக்கியது)
 • தேங்காய் துண்டு 1/2 கப்
 • மிளகாய் தூள் 1/4 தேக்கரண்டி.
 • கொத்தமல்லி தூள் ஒரு தேக்கரண்டி
 • கரம் மசாலா 1/4தேக்கரண்டி.
 • மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகை அளவு.
 • பச்சை மிளகாய் ஒன்று (நறுக்கியது).
 • தக்காளி ஒன்று (நறுக்கியது)
 • உப்பு தேவையான அளவு.

செய்முறை

 • இரண்டு பெரிய சைஸ் உருளைக்கிழங்கினை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதனை பொடி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
 • அதை ஒரு பாத்திரத்தில் போட்டு காய் வேகம் அளவிற்கு தண்ணீர் சிறிதளவு தூள் உப்பு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். காய் வெந்தேதும் அடுப்பை அணைத்து வைத்துக் கொள்ளவும்.
 • அடுத்து ஒரு பெரிய வெங்காயத்தை தோள் நீக்கி பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் இஞ்சி ஒரு துண்டு எடுத்து தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும் அதேபோலவே பூண்டு மற்றும் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும் .
 • அடுப்பில் ஒரு வணலி வைத்து அதில் மூன்று தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை ஊற்றிக் கொள்ளவும். அவை சூடானதும் கால் ஸ்பூன் தேங்காய் கரண்டி சோம்பு சேர்த்து நன்றாக பொரிய விடவும்.
 • அடுத்து நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகள் மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலையை போட்டு வதக்கவும். அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்கள் மற்றும் தக்காளி துண்டுகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
 • பின் நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டு அரை தேக்கரண்டி மிளகாய் தூள் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி தூள் 1/4 தேக்கரண்டி கரம் மசாலா இரண்டு சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் ஆகியவற்றை பச்சை வாசனை நீங்கும் வதக்க வேண்டும்.
 • பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். அடுத்து வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து கீழறவும் உப்பு தேவைப்பட்டால் சேர்த்து நன்கு வறுத்து அடுப்பை அணைத்து வைக்கவும் இவ்வாறு செய்வதால் உருளைக்கிழங்கு ரோஸ்ட் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

Read Previous

வீட்டில் செல்வம் செழிக்க இந்த ஆன்மீக வழிகளை பின்பற்றினால் போதும்..!!

Read Next

தொழிலில் நல்ல முன்னேற்றம் காண வேண்டுமா..? இந்த ஒரு வார்த்தையை தினமும் சொல்லி வாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular