அட்டகாசமான சுவையில் துவரம்பருப்பு, தக்காளி சூப் செய்முறை..!!

தக்காளி சூப் சாப்பிட்டு இருப்பீர்கள். வித்தியாசமான தக்காளி துவரம்பருப்பு சூப் செய்து சாப்பிடலாம். இதில் துவரம் பருப்பை சேர்ப்பதனால் உடம்பிற்கு நல்லதும் கூட.

தேவையான பொருட்கள்:

தக்காளி – 1/4 கிலோ
வெங்காயம் – 150 கிராம்
துவரம்பருப்பு – 1/4 ஆழாக்கு
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 1/2
குழிக்கரண்டி கறிவேப்பிலை – 1
கொத்து பூண்டு – 6 பல்
உப்பு – தேவையான அளவு

மசாலா அரைக்க:

தனியா – 1 கைப்பிடியளவு
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:

மசாலா அரைக்கத் தேவையான பொருட்களை அரைத்து, தனியாக வையுங்கள். பருப்புடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வையுங்கள்.

தக்காளியை, வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயத்தைப் போட்டுத் தாளியுங்கள்.

இதில் தக்காளி, வேக வைத்து மசித்த பருப்புடன், நான்கு தம்ளர் தண்ணீர் விட்டுக்கொதிக்க விடுங்கள்.

கலவை நன்றாக கொதி வரும்போது, அரைத்த மசாலாக்களைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்குங்கள். அருமையான சுவையான துவரம்பருப்பு தக்காளி சூப் ரெடி.

Read Previous

மன அழுத்தமா?.. மனதை அழுத்தும்போது என்ன விளைவு உண்டாகும்?.. நீங்க என்ன செய்ய வேண்டும்?..

Read Next

காதலருடன் உல்லாசமாக இருந்த அத்தை..!! நேரில் பார்த்த 5 வயது சிறுமி கொடூர கொலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular