
உலகம் முழுவதும் அசைவ பிரியர்களின் விருப்ப உணவு பட்டியலில் முன்னணி வகிப்பது சிக்கன் வைத்து சமைக்கப்படும் உணவுகள் தான். ஆனால் சிக்கன் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் போன்ற பரவலான கருத்து உள்ளது.
உடலுக்கு தேவையான புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிக்கன் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவாக மாற காரணம் அவற்றை அதிகப்படியான எண்ணெய் மற்றும் மசாலாக்களுடன் சேர்ப்பதால் தான்.
வேகவைத்த சிக்கனில் தேவையற்றகொ ழுப்புகள் இல்லாமல் இருப்பதால் சிக்கனை சாப்பிட இதுவே சிறந்த முறையாக பார்க்கப்படுகிறது. எண்ணெய் சேர்க்காமல் வேக வைத்து சாப்பிடக்கூடிய சிக்கனை உடல் எடை குறைப்பில் ஈடுபடுபவர்களும் சாப்பிடலாம். பொரித்த சிக்கன் மற்றும் சிக்கன் மசாலா போன்றவற்றை செரிமானம் செய்ய உடல் அதிக வேலை செய்யக்கூடியதாக இருக்கும்.
இதற்கு மாறாக வேக வைத்த சிக்கன் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். b6, b12 இரும்பு , ஜின்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிக்கனில் நன்மைகள் வேகவைத்து சாப்பிடும்போது அப்படியே கிடைக்கிறது. உடலுக்கு தேவையான புரதம் கிடைப்பதில் வேக வைத்த சிக்கன் முக்கிய பங்கு வகிக்கிறது.
சிக்கனில் இருக்கும் சத்துக்கள் தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. சிக்கனை வறுத்தோ அல்லது அதிகமான மசாலாக்களை சேர்ப்பதாலோ அவற்றின் நன்மைகள் குறைய வாய்ப்பு உள்ளது என்பதால் அவ்வபோது வேகவைத்த சிக்கனை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக அமையும் என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.