
ஹிந்தியில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 404 என்ற திரைப்படம் மூலமாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் நடிகை சாரா அர்ஜுன். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு ஐந்து வயது. அதே ஆண்டு தமிழிலும் குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமானார். இவர் தமிழில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் தான் முதல் முதலாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு மகளாக நடித்திருந்தார். இவருக்கும் விக்கிரமுக்கும் இடையேயான தந்தை மகள் உறவை மையமாக வைத்து அந்த திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
ஐந்து வயதிலேயே இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரே படத்தில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உச்சத்திற்கு சென்று விட்டார். இதனால் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. இதனைத் தொடர்ந்து சைவம், சில்லு கருப்பட்டி, பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது 18 வயதாகும் இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.
விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டேஷன் கேங் என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். நடிகை சாரா அர்ஜூன் பாலிவுட்டில், ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சாரா அர்ஜுன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் மகளாக நடித்த சின்ன பொண்ணா இது என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
View this post on Instagram