அண்ணன், தம்பி குத்திக் கொலை..!! போலீசார் தீவிர விசாரணை..!!
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே, கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி குத்திக் கொலை செய்யப்பட்டனர். காரம்பாடு அருகே நடந்த கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில் இருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் குமரி மாவட்ட எஸ்.பி. தலைமையிலான போலீசார் பார்வையிட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.