
அண்ணன் மற்றும் தம்பி கண்டிப்பா இதை எல்லாம் செஞ்சுடாதீங்க.!! ஆபத்து உங்களுக்கு தான்..!!
நம்முடைய முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து அண்ணன் தம்பிகள் ஒரே இடத்தில் வீடு கட்ட கூடாது. என்று சொல்வார்கள். ஏன் கட்டினால் என்ன என்ற பல கேள்விகள் நம்மில் எழும்பும். ஏனெனில் ஒரே இடத்தில் வீடு கட்டும்பொழுது ஏதாவது மன வருத்தம் ஏற்பட்டு உறவு விரிசல் அடைய கூட வாய்ப்பு உள்ளதாம்.
அதுமட்டுமின்றி எந்த உடன்பிறந்த பிறந்த ரத்த உறவுமே கொஞ்சம் விலகி இருக்கும் போது அந்த ரத்த உறவுகள் நன்றாக வாழ்கிறார்கள் என்பது கூறப்படுகிறது. அண்ணன் தம்பிகள் இருவருக்கும் ஒரே மேடையில் ஒரே நாளில் திருமணம் செய்யக்கூடாது. குடும்பச் சொத்துக்களை பாகப்பிரிவு செய்யும்போது அண்ணனுக்கு மேற்கும், தம்பிக்கு கிழக்கும் இருக்க வேண்டும். வீடு கட்டும் பொழுது அண்ணனுக்கு மேற்கும் தம்பிக்கு கிழக்கும் வீடு கட்ட வேண்டும். பெரியவர்களுக்கு திதி கொடுக்கும்போது இருவரும் இணைந்து கொடுத்தால் மிகவும் நல்லது. கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.