அண்ணாமலை மீது ஆளுநர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுத்தாக கூறப்பட்ட விவகாரம்..!! ஆளுநர் மளிகை விளக்கம்.!!

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மீது குற்ற வழக்குகள் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, இதனை உண்மை என்று நம்பிய இடதுசாரி ஆதரவாளர்கள் அதனை விவாத பொருளாக்கியுள்ளனர்.

அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்க அவருக்கு வழங்கப்பட்ட ஈசட் பிளஸ் பாதுகாப்பு முறையே காரணம். அவர் முன்னாள் ஐபிஎஸ் என்பதால் இவ்வாறான நடைமுறை என பல தகவலும் பகிர்ந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது ஆளுநர் மாளிகை இது குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த விஷயம் தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது  “தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை மீது குற்ற வழக்கு பதிவு செய்ய அனுமதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் குற்றவழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக பரவி வரும் தகவல் உண்மைக்கு மாறானது. இது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் ஆளுநர் மாளிகை வெளியிடவில்லை, அண்ணாமலையின் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய ஆளுநர் மாளிகை எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கப்படவில்லை”, என்று தெரிவித்துள்ளனர்.

Read Previous

“ஐஐடி-யில் படிக்க வேண்டும் என்பதே ஆசை” – 500 க்கு 492 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் ரிஷி.!!

Read Next

“கோவையில் சிறையில் என்னை கொல்லப்போறாங்க..!!” – செய்தியாளர்களிடம் சவுக்கு சங்கர் அதிர்ச்சி தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular