அதலைக்காயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
‘அதலைக்காய்’ சர்க்கரை நோய் முதல் புற்று நோய் வரை சிறந்த மருந்து..!! அடிக்கடி சாப்பிடுங்க..!!
நம் உணவில் சமைக்க பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று பாகற்காய். பாகற்காய் போன்றே கசப்பு தன்மை உடைய ஒன்று அதலைக்காய். இது மருத்துவ குணங்கள் நிறைந்த காயாக இருக்கிறது இது பெரும்பாலும் அனைத்து நேரங்களிலும் கிடைப்பதில்லை மழைக்காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு காயாகும்.
இதில் நீர் சத்து, மாவுச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இது சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
குறிப்பாக உடல் சூட்டை தணிக்கவும், உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நுண்கிருமிகளை வெளியேற்றவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் சளி ஜீரணம் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் அதலைக்காய் பயன்படுகிறது.
எனவே ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த அதலைக் காயை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.