அதிகமான பயன்களைத் தரும் பயத்தங்காய்..!! இதுல பல மருத்துவ குணங்கள் இருக்கு..!!

பயத்தங்காய் நன்மைகள்:

அவரை குடும்பத்தை சேர்ந்த ஒரு காய்கறியாகும். பயத்தங்காய் என்பது இளம் பச்சை நிறத்தில் பீன்ஸை போலவே இருக்கும். ஆனால் பீன்சை விட மெல்லியதாகவும், நீளமானதாகவும்  இருக்கும். உள்ளே தட்டப்பயறை போல் இளம் பயிர்கள் இருக்கும். இதனை ‘காராமணி’ என்றும் கூறுவார்கள்.

பயத்தங்காயில் உள்ள பைட்டோகெமிக்கல் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்ஸ் இரண்டும் புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டவை. பயத்தங்காயில் நார்ச்சத்து, ஃபோலேட், இரும்புச்சத்து, அத்தியாவசிய தாதுச்சத்துகள் மற்றும் வைட்டமின்களை கொண்டது. புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு இந்த காய் அவசியமான ஒன்றாகும். முதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட நினைப்பவர்களும் அடிக்கடி காராமணியை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பயத்தங்காயில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து இரண்டும் அதிகம். இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும். நீரிழிவு கட்டுக்குள் வரும். இதயம், சிறுநீரகங்கள் உள்பட உடலின் முக்கிய உறுப்புகள் சீராக இயங்க அவசியத் தேவையான பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.

பயத்தங்காயின் மருத்துவப் பயன்கள்:

1. பயத்தங்காய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். இந்தக் காய் பசியைத் தூண்டி நீரைப் பெருக்கும். கபத்தை அகற்றும்.

  1. இதைப் பருப்புடன் சேர்த்து கூட்டு செய்தோ, கறி செய்தோ சாப்பிடலாம்.
  2. காராமணியில் உள்ள வைட்டமின் சி,நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கக்கூடியது. அடிக்கடி காராமணி சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.
  3. காராமணியில் உள்ள வைட்டமின் சி,நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கும். அடிக்கடி காராமணி சாப்பிட்டால் தொற்று நோய்கள் எளிதில் அண்டாது.
  4. கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலேட் சத்து காராமணியில் நிறைய உண்டு. ஃபோலேட் சத்து நிறைந்த உணவுகள்தான் பிறக்கும் குழந்தையை நரம்பு மண்டலக் கோளாறுகள் இல்லாமல் காக்கும்.
  5. பயத்தங்காயிலுள்ள நார்ச்சத்தானது எடைக்குறைப்புக்கு உதவி,நீரிழிவைக் கட்டுப் படுத்தி,இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
  6. பயத்தங்காய் வயிறு,கணையம் மற்றும் மண்ணீரல் தொடர்பான பிரச்னைகளைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது. மேலும் சீரான குடல் இயக்கத்துக்கு உதவி, சிறுநீர் பாதை அடைப்பை சரிசெய்து,சிறுநீர் நோய்களையும் சரியாக்குகிறது.
  7. காராமணியில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ்,இதயம் சம்பந்தமான  நோய்கள் வராமல் தடுக்கிறது.
  8. பயத்தங்காயில் உள்ள லிக்னின் என்னும் பொருள் சில வகையான புற்றுநோய்,பக்கவாதம்,ஹைப்பர் டென்ஷன் மற்றும் ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட நோய்களில் இருந்து காக்கிறது.
  9. கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து பயத்தங்காயில் அதிகமுள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் சீக்கிரமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

Read Previous

ஆண்கள் எப்போதுமே ஆண்கள் தான் என்பதற்கான சில எடுத்துக்காட்டுகள் என்னென்ன?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

BSNL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2025..!! Rs.75,000/- வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular