அதிகரிக்கும் பிக்ஸட் டெபாசிட்..!! அதிக வட்டி தரும் வங்கிகளின் பட்டியல் இதோ..!!

தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வது தற்போது உள்ள மக்களுக்கு ஒரு நாகரிகமான செயலாக மாறி விட்டது. தேவைக்கு அப்பாற்பட்ட பணத்தை பிக்சட் டெபாசிட் திட்டத்தில் போட்டால் வேகமாக பணம் சேரும் என்ற நோக்கத்தில் பலரும் தற்போது வங்கிகளில் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லை பாதுகாப்பான முதலீடு திட்டத்தில் முதலிடத்தில் இருப்பது பிக்சட் டெபாசிட் திட்டம் தான்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 444 நாட்களுக்கு 7.45% வட்டி விகிதம் கிடைக்கிறது. 1 வருட பிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக்கு 6.85% வழங்கப்படுகிறது. 3 ஆண்டுகளுக்கு 6.75%, 5 ஆண்டுகளுக்கு 6.50% வழங்கப்படுகிறது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 333 நாட்களுக்கு 7.40% வட்டி கிடைக்கும். 1 வருட பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.80%, 3 ஆண்டு பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.70%, 5 ஆண்டு பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.50% வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பாங்க் ஆப் பரோடாவில் 399 நாட்களுக்கு 7.30% வட்டி வழங்கும் மழைக்கால தமாகா திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. 1 வருட FD திட்டத்தில் 6.85%, 3 ஆண்டு FD திட்டத்தில் 7.15% மற்றும் 5 ஆண்டு FD திட்டத்தில் 6.50% வட்டி தரப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 4.75% முதல் 7.80% வரை இருக்கும். இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பர் 5, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 444 நாட்களுக்கு பிக்ஸட் டெபாசிட் கணக்கில் முதலீடு செய்தால் 7.30% வட்டி தருகிறது. மேலும், ஒரு வருடத்திற்கான FD திட்டத்தில் 7.10%, 3 மற்றும் 5 ஆண்டு FD திட்டத்தில் 6.50% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

பஞ்சாப் & சிந்து வங்கியில் 666 நாட்களுக்கான பிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் 7.30% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 3 ஆண்டு பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6.30%, 5 வருட பிக்ஸட் டெபாசிட்டுக்கு 6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது போன்று அதிக லாபம் தரும் வாங்கி எது என்பதை தேர்வு செய்து முதலீடு செய்வது முக்கியமானதாகும்.

Read Previous

உனக்காக மட்டும் வாழாதே..!! உன்னை நம்பி இருக்கும் அனைவரையும் வாழ வை..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

TCS நிறுவனத்தில் வேலை..!! பல்வேறு பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular