
அதிகரிக்கும் போர் பதற்றம்.. லெபனான் நாட்டில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்.. இந்திய தூதரகம் அறிவுறுத்தல்..!!
ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ராக்கெட் வீச்சுக்கு பதிலடியாக இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தொடர் தாக்குதலில் நேற்று (செப்டம்பர் 25) மட்டும் 50க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், இதுவரை 2,000க்கும் மேற்பட்டாேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. போர் பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் cons.beirut@mea.gov.in என்ற இமெயில் மூலமும், +96176860128 என்ற எண் மூலமும் இந்திய தூதரகத்துடன் இணைப்பில் இருக்கவும் இந்தியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.