நாம் இயற்கையை அழிப்பதனாலும் இயற்கையை மாசுபாடு செய்வதனாலும் இயற்கைக்கு புறம்பாக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இயற்கையை அழிப்பது மட்டுமல்லாமல் மனிதனையும் அளிக்கிறது என்று நாம் மறந்து விடுகிறோம், அப்படி இருக்கும் பட்சத்தில் காற்று மாசுபாட்டின் காரணமாக மனிதனின் ஆயுட்காலம் குறைவதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது..
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டு காரணமாக மனிதனின் உடல் நிலை பாதிக்கப்படுவதாகவும் இதனால் அங்கு வாழும் மக்களின் ஆயுட்காலம் குறைந்து வருவதாகவும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது, மேலும் அங்கு வசிக்கும் மக்களின் அதிகபட்ச ஆயுட்காலம் 8.5 ஆண்டுகள் குறையும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், காற்றின் தரக்குறீயிடு 2024 அருகில் வெளியாகி உள்ளது, இதற்கு முன் அதீத காற்று மாசுபாட்டின் காரணமாக டெல்லியில் வசிக்கும் மக்களின் சராசரி ஆண்டு காலமாக அவர்களின் ஆயுட்காலம் 12 ஆண்டு காலம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது, மேலும் இதனை அதிகாரப்பூர்வமாக உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது, இதனை ஈடு கட்டுவதற்கு மரங்களை வளர்ப்பதும் இயற்கையை அழிக்காமல் பாதுகாப்பதும் மனித இனத்தினை மீட்ப்பதற்கான ஒரு முயற்சியாகும் என்றும் கூறியுள்ளனர்..!!