அதிகளவில் பரவி வரும் டெங்கு பாதிப்பு .. தடுப்பூசி பணிகள் தீவிரம் – அரசு நடவடிக்கை!..

டெங்கு காய்ச்சலின் பாதிப்பானது கடந்த சில மாதங்களாக வியட்நாமில் உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது காய்ச்சல் அதிக அளவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல்:

தமிழகத்தில் கடந்த மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பாதிப்பானது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது நோய் பரவலை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் வியட்நாம் நாட்டில் நடப்பாண்டு தொடக்கம் முதல் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. வியட்நாமின் தலைநகரான ஹனோயில் மட்டும் கிட்டத்தட்ட 20,000 மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் வரையிலும் 3 ஆயிரம் பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டது. ஆனால் அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

வியட்நாமில் தற்போது வரை டெங்கு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99 ஆயிரத்து 639 ஆக உள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு டெங்வக்சியா மற்றும் குடெங்கா என்ற இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக வியட்நாமில் தற்போது வரை 27 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Read Previous

ஆவினின் இனிப்பு வகைகள் – ரூ,. 200 கோடிக்கு விற்பனை.. நெருக்கடியில் உரிமையாளர்கள்..!!

Read Next

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – மாநில அரசு ஊழியர்கள் போராட்டம்!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular