
டிஜிட்டல் பயிர் சர்வே எடுப்பதற்காக அதிகாரிகளுக்கு பதில் மாணவர்களை ஈடுபடுத்துவதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்..
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை நிலம் பயிர் குறித்த அனைத்து விவரங்களையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய் துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ மாணவியர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், தமிழ்நாடு அரசின் இயலாமையை மறைப்பதற்காக மாணவ மாணவியரின் பாதுகாப்பை பலி கொடுப்பது கண்டிக்கத்தக்கது, இந்தியா முழுவதும் வேளாண் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காகவும் நிலத்தின் தன்மை அளவு பயிர் வகைகள் வருமானம் கடன் காப்பீடு உள்ளிட்டு அனைத்தும் தரவுகளையும் டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்துடன் நிலங்களை டிஜிட்டல் முறையில் சர்வே செய்வதற்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது இதற்காக அக்ரி ஸ்டாக் என்று அறக்கட்டளையை உருவாக்கி உள்ள மத்திய அரசு அதன் வாயிலாக இந்த பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகள் கூறியுள்ளது, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வருவாய் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் தனியார் நிறுவனங்களைக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, தமிழ்நாட்டில் மட்டும் வேளாண்மை கல்லூரி மாணவர்களை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது கடந்த ஆறாம் தேதி தமிழகத்தின் 24 மாவட்டங்களில் உள்ள 48 கிராமங்களில் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் பயிர் சர்வே நடத்தப்பட்டுள்ளது. அதற்கு தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 22 நாட்கள் நீடிக்கும் முதன்மை சர்வே தொடங்கி நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்க தமிழக அரசு வேளாண்மை துறைக்கு ஆணையிட்டு இருக்கிறது, மேலும் டிஜிட்டல் பைட் சர்வே திட்டத்திற்கு ரூபாய் 200817 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இதில் மத்திய அரசு மட்டும் ரூபாய் 1940 கோடி வழங்கி இருக்கிறது, இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்படும் நிதியை கொண்டு தனியார் நிறுவனங்கள் மூலமாகவோ கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலமாக இப்பணி தமிழகத்தில் எளிதாக செய்ய முடியும் அதை விடுத்து மாணவர்களுக்கு இது போன்ற வேலைகளை தமிழக அரசு செய்ய வலியுறுத்தி இருக்கிறது, செலவிழிந்து செய்யும் வேலைகளுக்கான நிதியை என்ன செய்யப் போகிறீர்கள் ஆவேசமுடன் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்..!!