அதிகாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு – ஆம்னி பேருந்து மோதி விபத்து; 24 பேர் காயம்.!!

புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரைக்கால் நோக்கி பயணம் செய்த அரசு பேருந்து ஒன்று இன்று அதிகாலை கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பகுதியில் சென்று கொண்டிருந்தது அந்த சமயம் பேருந்து திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

அந்த விபத்து ஏற்பட்ட நேரத்தில் அரசு பேருந்தை பின் தொடர்ந்து வந்த தனியார் ஆம்னி பேருந்தும் அரசு பேருந்தின் மீது மோதியது, தனியார் ஆம்னி பேருந்து சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி  பயணிக்கையில் இந்த விபத்தை ஏற்பட்டுள்ளது. இந்த  விபத்தில் இரண்டு பேருந்துகளில் பயணம் செய்த 24 பயணிகள் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். அதிகாலை நேரத்தில் நடைபெற்ற விபத்தின் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு போக்குவரத்தை சீர்படுத்தினார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

காதல் கணவனுக்கு கம்பி நீட்டிய மனைவி.. 18 லட்சம் பணம்..!! 15 சவரன் நகையுடன் ஓட்டம்.. 3 பிள்ளைகளை தவிப்பு.!!

Read Next

தாய்ப்பாசத்தால் கொலையாளியான 17 வயது மகன்.!! தாயை கண்முன் அடித்த ரௌடியை நண்பருடன் சேர்த்து கொன்ற பயங்கரம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular