அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்.!! மூன்று வாகனங்கள் அடுத்தடுத்ததாக மோதி கோர விபத்து..!!

செங்கல்பட்டு அருகே லாரி ,ஆம்னி பேருந்து மற்றும் அரசு பேருந்து என அடுத்தடுத்ததாக மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்துள்ளது.

செங்கல்பட்டு அருகே பழமத்தூர் பகுதியில் உள்ள சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரத்தில் இருந்து  கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு சென்னை பூந்தமல்லிக்கு சென்ற லாரி ஒன்று பழுதாகி நின்றுள்ளது. இந்நிலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து நின்று கொண்டிருந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஈம்னி பேருந்தின்  முன் பக்கம் நொறுங்கியது. மேலும் ஆம்னி பஸ்ஸில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி  உயிர் இழந்தனர், இதனை தொடர்ந்து விபத்தில் சிக்கி நின்று கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் பின்பக்கம் அரசு பேருந்து ஒன்று மோதியது. இந்த விபத்தில் 20-கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த பயங்கர விபத்து காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் இந்த கோர விபத்து பெரும் அதிர்ச்சியிணையும் ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் வா என அழைத்த பெண்…!! நம்பி சென்ற விவசாயிக்கு நிகழ்ந்த சோகம்…!!

Read Next

திமுகவின் பழிவாங்கும் அரசியலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி…!! வானதி ஸ்ரீனிவாசன் உறுதி.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular