அதிகாலையில் பிளாக் காபி அருந்தினால் ஆயுள் அதிகரிக்குமா..??

தினமும் அதிகாலையில் பால் சேர்க்காத பிளாக் காபி குடிப்பதால் என்னென்ன ஆரோக்கிய நன்மையினை பெறலாம் என்பதை ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.

இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று பலரும் பல உணவுமுறைகளை கையாண்டு வருகின்றனர். அந்த வகையில் சிலர் காபிக்கு பால் சேர்க்காமல் குடிப்பதை வழக்கமாக்கி வைத்துள்ளனர்.

ஏனெனில் பால் சேர்த்து குடிப்பதால் மீண்டும் கொழுப்பு அதிகமாவதுடன், உடல் எடையும் அதிகரித்துவிடும். பின்பு இதய நோய் பிரச்சனை போன்றவை ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது.

தற்போது ஆய்வு ஒன்றில் பிளாக் காபி குடிப்பதால் இறப்பு அபாயத்தை குறைக்க முடியும் என்பதை கண்டறியப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் காலையில் காபி அருந்துவது இறப்பு அபாயத்தை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது காபி அருந்துவதற்கும், இறப்பு அபாயத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு, நாம் சேர்க்கப்படும் இனிப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பின் அளவைப் பொறுத்து மாறுபடுகின்றதாம்.

தினமும் 1 முதல் 2 கப் பிளாக் காபி அருந்துவது, ஒட்டுமொத்த இறப்பு அபாயத்தையும், குறிப்பாக இருதய நோயால் ஏற்படும் உயிரிழப்பையும் குறைப்பதாக ஆய்வுகள் முடிவு செய்கின்றன.ஆனால் அதிக அளவில் சர்க்கரை சேர்க்கப்பட்ட காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. குறைந்த அளவு சர்க்கரையுடன் காபி அருந்துவது, இறப்புக்கான அபாயத்தை 14 சதவீதம் வரை குறைப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கப் காபி அருந்துவது,  இறக்கும் அபாயத்தை 16 சதவீதம் குறைக்கிறது. ஆனால் 3 கப் மேல் காபி அருந்துபவர்களுக்கு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என ஆய்வு கூறியுள்ளது.

Read Previous

வெறும் 2 ரூபாயில் கவரிங் நகைகளை தங்கமாக்கும் திரவம்..!!

Read Next

இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க..!! உஷாரா இருங்க மக்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular